Wednesday, July 15, 2009

தமிழ் கடி ஜோக்ஸ்

தயாரிப்பாளர்(கதாநாயகனிடம்): பேசின தொகையைத்தான் முதலிலேயே மொத்தமா கொடுத்துவிட்டேனே, பின்ன இன்னும் எதுக்கு மேல வேணும்னு கேக்கறீங்க?

கதாநாயகன்: எல்லாரும் படத்தில,நான் ஓவர் ஆக்ட் பண்ணிருக்கறதாச் சொல்றாங்களே- அதுனாலதான்!

***

நீதிபதி (குற்றவாளியிடம்): பயங்கரமான ஆயுதங்களைக் கோர்ட்டுக்குள்ள கொண்டுவரக் கூடாதுன்னு உங்களுக்குத் தெரியாதா?

குற்றவாளி: அப்போ நீதிபதி ஐயா மட்டும் கையிலே சுத்தி வச்சுக்கலாமா?

***

ஆசிரியர்: உங்க கதை ரொம்ப சுமாரா உப்புச் சப்பே இல்லாம இருக்கு!

எழுத்தாளர்: நான் உங்களைக் கதையைப் படிக்கத்தானே சொன்னேன், நீங்க ஏன் அதைச் சாப்பிட்டங்க?

***

டாக்டர்: எதுக்கு அரை குறையா ஒரு கதையை எழுதி எங்கிட்ட கொடுக்கறீங்க?

எழுத்தாளர்: நீங்க கதையை முடிக்கறதிலே கெட்டிக்காரர் னு சொன்னாங்க அதுதான்!

***

நோயாளி : ஆபரேஷனுக்கு ஐயாயிரம் ரூபாய்னுதானே சொன்னீங்க? இப்போ ஐயாயிரத்து ஐம்பது ரூபாய் னு பில் போட்டிருக்கீங்களே?

டாக்டர்: அதுவா. அது நான் உன்னோட வயத்திலெ மறந்து வச்சுட்ட கத்திரிக்கோலின் விலையும் சேர்த்திருக்கேன்!

***

"வீட்டுக்கு ரெய்ட் பண்ண வந்தவங்ககிட்ட ஏன் பல்லை ஈ ன்னு காண்பிக்கிறீங்க?"

அவங்க என்,"சொத்தை"யெல்லாம் காமிக்கச் சொன்னாங்களே!


"ஏலக்கடைகாரர் வீடுதானே இது! நீங்க மூணு பேரும் யாரு?".

"நான் முதல் தாரம், இவர் இரண்டாம் தாரம், அவர் மூன்றாம் தாரம்...!".

****

"காதலியோட, ஹனிமூன் போனியே, திருப்தியா வந்தியா?".

'திருப்பதியா வந்தேன்!".

****

"நேத்து, நம்ம தலைவர் பத்திரிகையாளர் கூட்டத்தில நம்ம மானத்தை வாங்கிட்டாரு!".

"எப்படி?".

" 'பிரசார் பாரதி பற்றி உங்க அபிப்பிராயம் என்ன' ன்னு கேட்டப்போ, 'அவர் ரொம்ப நல்ல கவிஞர்'னு சொல்லிட்டாரு!".

****

"அந்தக் காலத்தில நான், ஒருநாளைக்குப் பத்து ஆபரேஷன் பண்ணுவேன்!".

"இறந்த காலம்னு சொல்லுங்க!".

* * * * * * * * * * * * *