கடவுளைக் கண்டதும்
கேட்டேன்
'தாங்கள்தான் கடவுளா?'
சிரித்து விட்டு கடவுள்
மௌனமாயிருந்தார்
'உம்மை ஏன் கடவுள்
என்கிறார்கள்?'
'நான் மனிதனைப்
படைத்தேன்'
'மனிதன்தானே உம்மைப்
படைத்தான்?'
மீண்டும் மௌனமாய்
சிரித்தார் கடவுள்
'தன்னைக் கடவுளாக
உணராதவன்
மனிதனாக உணர்பவன்தான்
உண்மைக் கடவுள்'
கடவுள் சிரித்தார்.
'நீ கடவுளாக இரு
நான் மனிதனாக இருக்கிறேன்'