கடைபிடிக்க வேண்டி நினைத்திருந்தேன்.
- முடிந்தவரை சுத்த தமிழில் எழுத வேண்டும்.
- சிறுகதைகள் மற்றும் கவிதைகள் மட்டும் எழுத வேண்டும்.
- அனுபவங்களையொ மற்றவைகளோ எழுத கூடாது.
ஆனால் நான் எழுதியதோ ஒரு கதையும்.. ஒரு கவிதையும்...
ஏன் என்னால் எழுத முடிவதில்லை?
- சோம்பேறித்தனம்
- விசை பலகை மூலம் தமிழில் தட்டச்சு செய்வது(ம்ம்ம்..ரொம்ப கஷ்டம்)
- கற்பனை மிக குறைந்த நேரமே இருப்பது(மூன்று கதைகள் எழுதி பாதியில் கிடக்கின்றன)
எனவே நண்பர்களே...
"சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம்"
என்பதால் எனது கொள்கைகளை உடைத்து...எனது எண்ணங்களையும், அனுபவங்களையும் இப்பதிவில் எழுத ஆரம்பிக்கிறேன். முடிந்தவரை நல்ல தமிழிலில் எழுத முயற்சி செய்கிறேன்.
எனது எழுத்து பிழைகளையும், சொற்பிழைகளையும் மன்னிப்பிற்களாக..மேலும் அதை கோடிட்டு காட்டுமாறும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.